Wednesday 7 November 2012

மைனர் செயினும் பாப்பாத்தி குளமும்


கௌதம் டீன் ஏஜ் எட்டி பார்க்க காத்திருக்கும் வயது... சிறு வயது முதலே சுட்டி.. நல்லூர் கிராமத்தின் இளம் சீயான் இவன் தான்... அப்புறம் என்ன இவன் தான் நம்ம கதையோட ஹீரோ னு தெரிஞ்சு போச்சு.. அப்போ அவனை சுத்தி 4 நண்பர்கள் கூட்டம் வேணாமா.. ராஜா. எல்லா குரூப் ல யும் ராஜா னு ஒருத்தன் இருப்பாங்க. அது நம்ம தமிழ்நாட்டோட பாரம்பரிய பேர் ஆச்சே. இவனும் கௌதமுக்கு கொஞ்சமும் சளைச்சவன் இல்லை. எல்லா அலம்பலும் இவனும் சேர்ந்து தான் பண்ணுவான். அப்புறம் 2 டம்மி பீஸ். கணேஷ், சுரேஷ் 2 பேரும் இவங்க கூட தான் இருப்பாங்க. ஆனா இருக்கிற இடமே தெரியாது. கௌதம், ராஜா பண்ற தப்புக்கு மாட்டுறது என்னவோ இந்த 2 அடிமைகள் தான். 4 பேரும் ஒரே பள்ளியில் 11 வது படிக்கிறாங்க. இவங்க எல்லாம் புக்கை எடுத்து படிச்ச நேரத்தை விட குளத்துல குதிச்ச நேரம் தான் அதிகம், எதுக்குன்னு பார்க்குறீங்களா?? அவங்க ஊர் பாப்பாத்தி குளத்துல குளிக்கிறதுல அவ்வளவு இஷ்டம். வேற எங்க குளிச்சாலும் குளிச்ச ஒரு உணர்வே இருக்காது அவங்களுக்கு.. 

அன்றைக்கும் அப்படி தான் 4 பேரும் கிளம்பி குளிக்க போனாங்க. இவங்க கூட குளிக்க வந்த எல்லாரும் ஆடு, மாடு எல்லாத்தையும் குளிப்பாட்டி, ஒரு மூட்டை துணியை துவைச்சு முடிச்சு, குளிச்சு வீட்டுக்கு போனாலும் இவனுக மட்டும் குளத்துல ஊறிக்கிட்டே இருந்தாணுக.. ஒரு வழியா வீட்டுக்கு கிளம்ப மனசு வந்து அவரவர் வீட்டுக்கு போனாங்க. கௌதம் உள்ளே நுழையும் போதே “இவ்வளவு நேரமா டா. சரி. சரி. இங்க வா. தலையை கூட ஒழுங்கா காய வைக்கலை” என சொல்லிக்கொண்டே அவன் கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து துடைத்து விட்டார் அவன் அப்பா. அப்போது தான் அவன் கழுத்தில் கிடந்த செயினை காணாமல் போனதை கவனித்தார். 

“எங்க டா செயின்?” என வினவ அவன் திரு திருவென விழித்தான். இவ்வளவு சேட்டை பண்ற கௌதமுக்கு அவங்க அப்பானாலே பேஸ்மென்ட் வீக் ஆயிடும். 

“குளத்திலே தொலைச்சுட்டு வந்துட்டியா ராஸ்கல்?பவுன் என்ன விலை விக்குது தெரியுமா? 2 பவுன் செயின் டா அது. ஆசையா உனக்கு வாங்கி போட்டா இப்புடி தொலைச்சுட்டு வந்து நிக்குறியே. என் கண்ணு முன்னாடி நிக்காத. போ. போயி தேடி எடுத்துக்கிட்டு வா “ என அனுப்பி விட்டார். அதன் பின்னும் இவருக்கு மனம் ஆறவில்லை. தன் வேலையாட்களை அழைத்துக் கொண்டு பாப்பாத்தி குளத்திற்கு சென்று தேட ஆரம்பித்தார். 

கௌதம் தன் நண்பர்கள் நால்வரையும் வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு வர ஒன்றரை மணி நேரம் ஆனது. அது வரை வேலையாட்கள் அனைவரும் குளத்தையே அலசி ஆராய்ந்து பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. வர்ற வழியில் சுரேஷ் கூறிய பின் தான் கௌதமுக்கு நினைவுக்கு வந்தது. குளிக்க போகும் முன் செயினை கழற்றிய சட்டை பையில் வைத்தது. வீட்டுக்கு போயி அப்பாக்கிட்ட சொல்லலாம் என போகிற வழியில் குளத்தின் கரையில் அவன் அப்பா நின்று கொண்டிருந்தார். வேலையாட்கள் உள்ளே தேடுவதையும் பார்த்து அதிர்ந்த கௌதம் “இப்போ போயி அப்பாக்கிட்ட சொன்னா நல்லா அடி விழும். இப்போ என்ன செய்யுறது டா” எனக் குழம்பிக் கொண்டிருந்தான். 

அதற்குள் அவன் அப்பா அவனை பார்த்து “டேய் எருமை மாடு!! செயினை தொலைச்சுட்டு எங்க ஊரு சுத்துற!! செயினை தேட சொல்லி அனுப்பினா இவனுகளோட என்ன டா மீட்டிங்.? இவனுக தான் டா உன்னையை கெடுக்கிறது.” என்று மறுபடி அர்ச்சனையை ஆரம்பித்தார்
.
இதுல இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்’னு யோசிச்சவன் தீடீரென்று போட்ட சட்டையுடன் குளத்தில் இறங்கினான். ஒரு கால் மணி நேரம் கழித்து மேலே வந்து “செயின் கிடைச்சுருச்சு பா” எனக் கொண்டு வந்து கொடுத்தான். “இவ்வளவு நேரமா நாங்க தேடுறோம். எங்களுக்கு கிடைக்கலை” என யோசித்தவர் “சரி எப்படியோ கிடைச்சுருச்சு. அதுவே போதும்” என நிம்மதியுடன் வீட்டிற்கு கிளம்பினார். ஒண்ணும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கௌதமும் கிளம்பினான். இப்படி ஒரு சம்பவத்துக்கு பின்னாடியும் கௌதம் பாப்பாத்தி குளத்தையும் விடலை. அவனோட மைனர் செயினையும் கழட்டலை... 

ஜென்ம சாபம்


தேர்தல் நெருங்க நெருங்க மோகன்காந்தி மனதில் பதற்றமும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது. மீண்டும் மத்தியில் தன் ஆட்சியை நிலைநிறுத்த முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகரிக்க தன் ஆஸ்தான சாமியாரை சந்தித்து தன் எதிர் காலம் பற்றி கேட்டு அறிய முடிவு செய்தான். மறுநாள் தன் முடிவின் படியே சத்யானந்தா சாமியாரை சந்தித்து தன் எதிர்காலம் பற்றியும், வரவிருக்கின்ற தேர்தல் பற்றியும் கேட்டான்.

“என்ன சாமி!! இந்த தேர்தலும் எனக்கு சாதகமாக தானே இருக்கிறது??”

“இல்லை. உன் ஆட்சி காலம் இத்துடன் முடிவடைகிறது.. இனி உன்னால் எப்போதும் ஆட்சியை பிடிக்க முடியாது”.
“என்ன சொல்றீங்க சாமி ??”

“ஆம். உன் பூர்வ ஜென்ம சாபம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.”

“சாபமா !! சாபம் முடிஞ்சா நல்லது தானே !!”

“உன் பூர்வ ஜென்ம கதையை சொல்கிறேன். முதலில் அதை பொறுமையாக கேள்”

“சரி சொல்லுங்க சாமி”.

“பூர்வ ஜென்மத்துல நீ ஒரு நாட்டோட அரசன். அப்போது உன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முட்டாள்களாக , அடி மட்ட அறிவே இல்லாது உனக்கு உபத்திரவம் கொடுத்து வந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் உன் கோபமும், எரிச்சலும் அதிகமாகவே இந்த பிரச்சனையை தீர்க்க உன் நாட்டில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த முனிவரை சந்திக்க சென்றாய். உன் படையுடன் சென்று கடுந்தவத்தில் இருந்த முனிவரை தவம் கலையும்படி செய்ய அவர் கடும் கோபமுற்றார். 

முனிவர்: ”மதி இழந்த மன்னா!! எதற்காக என் தவத்தை கலைத்தாய்?”

மன்னன்: “மன்னிக்க வேண்டுகிறேன் முனிவரே. நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. என் நாட்டு மக்களின் முட்டாள் தனமான செயல்களுக்கு அளவில்லாமல் சென்று விட்டது. அதற்கு ஒரு தீர்வு காணவே தங்களை காண வந்தேன்”.

முனிவர்: “உன் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல. உனக்கும் புத்தி என்பது சிறிதும் கிடையாது. இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் இனி வரும் அனைத்து ஜென்மங்களிலும் நீ நாடாளும் மன்னனாகவும், உன் நாட்டு மக்கள் முட்டாள்களாகவுமே இருப்பார்கள்.”

(சத்யானந்தா சாமியார் மனதில் – உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாணுக பாரு கண்டிப்பா இந்த நாட்டு மக்கள் முட்டாள் தான்). 

மன்னன்: “முனிவரே. தயவு கூர்ந்து தாங்கள் என்னை மன்னிக்கணும். தங்கள் தவம் கலைந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் தாருங்கள் முனிவரே.” 

முனிவர்: “என் சாபத்தின் பலனை நீ அடைந்தே தீர வேண்டும்”.

மன்னன்: “முனிவரே. தங்களை மன்றாடி கேட்கிறேன். என்னை மன்னித்து விமோசனம் தாருங்கள்.”

முனிவர்: “உன் கடைசி ஜென்மத்தில் மட்டும் ஐந்து ஆண்டுகளில் உன் சாம்ராஜ்யம் முடிந்து விடும். அதன் பின் உன் மக்கள் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள். இது தான் உன் சாப விமோசனம்”.

மன்னன்: ”இதற்கு வேறு வழியே இல்லையா முனிவரே?”

முனிவர்: “இதற்கு மேல் இங்கிருந்து என் கோபத்தை அதிகரிக்காமல் சென்று விடு.”

“இந்த சாபத்தின் படி இது தான் உன் கடைசி ஜென்மம். ஐந்து வருடங்களில் உன் ஆட்சியும் முடிந்தது என்றார் சத்யானந்தா” (நாட்டு மக்கள் இனியும் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் என்று மனதில் நினைத்து கொண்டார்).

“இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லையா சாமி?” என்றான் மோகன் காந்தி.

“அதை நீ அந்த முனிவரை தான் போய் கேட்கணும்!!!”. 

சத்யானந்தா சொன்னது போல் மோகன் காந்தி’யின் கட்சி அந்த தேர்தலில் மிக பெரிய தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. சத்யானந்தா பெரிய சாமியார்’னு நீங்கலாம் நினைச்சிடாதீங்க. அவனும் ஒரு டூபாக்கூர் தான். ஜென்ம சாபம்’னு சொன்னதெல்லாம் அவன் அவிழ்த்து விட்ட புளுகு. 

எது எப்படியோ. முட்டாள் என்றும் முட்டாளாக இருக்க மாட்டான். அவனுக்கும் ஒரு நாள் அறிவு வரும். அந்த நாள்’ல அவனை முட்டாள் ஆக்குன எல்லாரும் வீழ்வாங்க. நம்ம நாட்டு மக்களை முட்டாள்களா நினைக்கிற எல்லா அரசியல்வாதிகளும் கடைசியில மக்களாலேயே வீழ்த்தப்படுவார்கள்.

Wednesday 1 August 2012

மலடியின் குழந்தை

வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...
 
காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....
 
அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...
 
வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...
 
பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...

நேசத்தின் சுவாசம் - என் சினேகிதி


உன் காதல்
கடிதத்திற்கு
கூட கிடைக்கவில்லை
தனிமை...
நம் நட்பின்
பகிர்தலின் முன்.....

எத்தனை முறை
நீ முகம்
திருப்பி நின்றாலும்
கை கூப்பி
உன்னை வேண்டியிருக்கிறேன்...
எனக்காக அல்ல...
நம் நட்பின்
பிரிதலை
நீ தாங்க மாட்டாய் என்றே!!

எத்தனையோ முறை
நாம் பேசும்
அர்த்தமற்ற வார்த்தைகளை
எல்லாம் நகைச்சுவை
என்று நினைத்து புன்னகைத்திருக்கிறோம்..
புன்னகைக்கு காரணம்
வார்தைகள் அல்ல..
சினேகிதமே.....

தொலை தூர
பயணங்களில் எல்லாம்
சோர்வுற்ற என்னை
சேர வேண்டிய இடம்
சேர்த்தது
சேர்ந்திருந்த உன் கைகளே!!!!!

மழை விழும்
ஒவ்வொரு நாளும்
நினைத்து பார்க்கிறேன்
கல்லூரி நாளில்
ஒரு குடையில்
இருவர் நடக்கும்
நாட்களை...
நட்பில் நனைய
நமக்கு தேவைப்பட்டது
ஒரு குடை

கடற்கரையில்
படகுகளுக்கு இடையில்
ஒளிந்து பேசும்
அவஸ்தை இல்லை
நம் நேசதிற்கு...
அலைகளுடன்
நம் நட்பை
பகிர தடை
ஏதும் இல்லை

விடுமுறை என்றால்
கொண்டாட்டம் தான்
பிறருக்கு...
நட்பை தூர படுத்தும்
கல்லூரி தான்
எதிரி நமக்கு...

தோளில் சாய்ந்த
தோழனை
தோழமைலிருந்து பிரித்து
தோல்வியடையும் காதலாக
தோன்ற வைத்த சினிமாவை
தோற்கடித்தோம் நாம்......

அடித்து பிடித்து
ஒரே தட்டில்
உண்ட உணவிலும்
ஆளுக்கொரு வாய்
ஊட்டிக்கொண்ட உணவிலும்
அல்லவா
அறுசுவையை கண்டோம்....

கடற்கரை மணலில்
நாம் கட்டிய
நட்பு கோட்டையை
தகர்க்க வந்த
அலை கூட
நிதானித்து திரும்பியது
கடலுக்கே!!!

.

மழை கால சலுகைகள்


கதாபாத்திரங்கள்:

கஞ்சன் (ப்ரீ யா கொடுத்த விஷத்தை கூட குடிப்பான்)
மகா கஞ்சன் ( ப்ரீ யா இருந்தா அடுத்தவன் துப்புன விஷத்தையும் குடிப்பான்).

நகைச்சுவை:

இவங்க 2 பேரும் ஒரு மழை காலத்துல சந்திச்சு மழை கால இலவச சலுகைகளை பத்தி பேசுறாங்க.

கஞ்சன்: எங்க வீட்டு தெரு முனையில இருக்குள்ள அந்த மருத்துவமனையில நோயாளி கூட வரவங்களுக்கு இலவசமா ஊசி போடுறாங்கலாம் டா. .

மகா கஞ்சன் : பக்கத்து வீட்டு சின்ன பையன் இன்னைக்கு காலைல தான் தும்முனான். அவன் கூட போய் ஊசி போட்டுக்க வேண்டியது தான்..

கஞ்சன்: அது மட்டும் இல்லை டா. அந்த ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கே ஒரு மெடிக்கல். அங்க டேப்லெட் வாங்குறவங்களுக்கு ஒரு விக்ஸ் ப்ரீ யா தாரங்கலாம்.

மகா கஞ்சன்: அப்போ அந்த பையனுக்கு மாத்திரையும் அங்க வாங்க வேண்டியது தான். ஒரே கல்லுல 2 மாங்காய். தாங்க்ஸ் மச்சி.

மகா கஞ்சன்: பஜார் ல இருக்கே பெரிய குடை கடை. அங்க ரெயின் கோட் வாங்குறவங்களுக்கு ஒரு குடை இலவசமாம்.

கஞ்சன்: அப்படியா. என் மச்சான் ரெயின் கோட் வாங்கி தர சொல்லி நேத்து தான் பணம் கொடுத்தான். நல்ல வேலை. இந்த விஷயத்தை சொன்ன. இந்நேரம் நான் ஏமாற இருந்தேன்.

சருகு - ஹைக்கூ தொகுப்பு 4


சருகு - நகைச்சுவை

நபர் 1 : யோவ் ... என்னய்யா!!! பந்தியில வாழை இலைக்கு பதிலா சருகை போட்டுருக்கீங்க?

நபர் 2 : நீ ஆடி அசைஞ்சு வரதுக்குள்ள இலை காய்ஞ்சு சருகு ஆயிருச்சு

நபர் 1 : இதுக்கு தான் தண்ணி தெளிச்சு வைக்கணும்றது....


பின் குறிப்பு: தமிழ் தோட்டம் தள போட்டியில் முதலிடம் பெற்ற நகைச்சுவை 

சருகு

சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின் பூசாரி. அவனது ஒரே மகன் கணேசன்... தலை பிரசவத்திலேயே தன் மனைவியை பறிகொடுத்தவன். அதன் பின் அரசமரத்து கணேசனும், மகன் கணேசனும் மட்டுமே இவன் வாழ்க்கை என்று ஆனது... தன் மகனை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்க்க பெரும்பாடு பட்டான். அவனும் சுட்டி தனம் மிக்கவனாகவே வளர்ந்தான். மகனுக்கு படிப்பின் மேல் பெரிதாக ஆர்வம் இல்லை என தெரிந்து மகனை கோவிலின் பராமரிப்புகளில் ஈடுபடுத்த எண்ணினான்..

வழக்கமாகவே சேவுகன் தான் கோவிலின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வான். மரத்தடி பிள்ளையார் என்பதால் சருகுகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பான். சின்ன கோவில் தான் என்றாலும் பக்தர்கள் கூட்டம் காலையிலும் மாலையிலும் இருந்த வண்ணமே இருக்கும். கோவிலின் அருகிலே வீடு என்பதால் அவனுக்கு வசதியாகவே இருந்தது. 

ஒரு நாள் தன் மகனை அழைத்து தனக்கு பின் கோவிலை கவனித்து கொள்ளும் பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தான். அப்பொழுதும் விளையாட்டு புத்தியுடன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு அருகில் இருக்கும் மந்தையில் விளையாடி கொண்டு இருந்த பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அன்று முதல் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் செய்வான். மறுநாள் ஏதாவது ஒரு காரணம் தேடி தந்தையிடமே ஒப்படைத்து விடுவான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. சேவுகனும் நாள் ஆக நாளாக பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணி மனதை தேற்றி கொள்வான். ஒரு நாள் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவுகன் இறந்து விட கோவிலின் முழு பொறுப்பும் கணேசனிடம் வந்தது.

தந்தையின் கடைசி ஆசைப்படி கோவிலை நன்கு கவனித்து கொண்டு இருந்தான். ஒரு மாதம் கடந்தது. அவனுக்குள் ஏதோ சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தனக்குள் முடங்கி கிடந்த விளையாட்டு தனம் தலை தூக்க ஆரம்பிக்க கோவிலை கவனிக்க முடியாமல் விளையாட செல்ல ஆரம்பித்தான். காலையில் அரை குறையுமாக பெருக்கி செல்ல கோவிலில் சருகு நிறைந்து இருந்தது. 

அன்று கோவிலுக்கு கிராமத்தின் நாட்டாமை வர கோவிலின் நிலைமையை கவனித்து கணேசனுக்கு அன்றைய தினம் நல்ல அர்ச்சனை செய்தார். மனம் உடைந்த போன அவன் அன்று இரவு உறங்க போகும் முன் கடவுளிடம் சென்று “உன்னை நானும் என் தந்தையும் கவனித்து கொண்டதற்கு பரிகாரமாக நாட்டமையிடம் என்னை இப்படி என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே? உண்மையிலே உன் பக்தர்கள் மீது உனக்கு அக்கறை இருக்கிறதா? நான் என்ன செய்வேன். எல்லாம் இந்த சருகினால் வந்த வினை. எத்தனை முறை பெருக்கினாலும் சருகு கொட்டி கொண்டு தானே இருக்கிறது. இதற்கு தீர்வே கிடையாத?” என்று புலம்பி பார்த்தான். “ஏன் பேசாம இருக்க? ஏதாச்சும் பதில் பேசு ?” என்று கடவுளை திட்ட ஆரம்பித்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் அவன் முன் தோன்றி “மகனே !! என்ன உன் பிரச்சனை ? என்று கேட்க, அவனும் “இவ்வளோ நேரம் கதையா கேட்டு கிட்டு இருந்த சாமி. நான் பொலம்புறது உனக்கு வேடிக்கையா இருக்கா” என அலுத்துக் கொண்டு “ இந்த சருகு கொட்டிக்கிட்டே இருக்க கூடாது. இதான் என் பிரச்சனை என்று கூற “சரி மகனே அப்படியே ஆகட்டும். காலையில் நீ எழுந்து பார்க்கும் போது உன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என்று கூறி மறைந்தார். 

நிம்மதியுடன் உறங்கி போனான் கணேசன். அதிகாலை வழக்கம் போல எழுந்து கோவிலை பெருக்க துடைப்பத்துடன் வெளியில் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கோவிலின் மரமே வீழ்ந்து கிடந்தது. மரமே வீழ்ந்து போனதால் பிள்ளையார் சிலையையும் அந்த கிராமத்தின் பெரிய கோவிலுக்கு மாற்றி விட்டனர். கணேசனுக்கு இருந்த கோவில் வேலையும் பறிபோனது. வந்த வருமானமும் நின்று போனது. நம் வேலையை சரி வர செய்யாமல் கடவுளை பழிக்க கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். சோம்பல் தான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்பதை புரிந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தான் கணேசன். 


பின் குறிப்பு : தமிழ் தோட்டம் தள மாதாந்திர போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கதை .....


Friday 20 July 2012

மழை பாடல்



மானங்கருக்குதே வண்ண மயிலும் ஆடுதே
வறண்ட காட்டிலே ஆறும், குளமும் சிரிக்குதே
ஜனங்க பார்த்து ரசிக்குதே!!!
உழவன் மனசுல அறுவடை காலம் வந்ததே
மண் வாசம் வீசுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !!
இடியின் சத்தம் கேட்டு பிள்ளை மிரளுதே !!
அதையும் இசை என்று ஆக்கி நம்ம ஜனங்க பாடுதே!!

மின்னி மின்னி சின்ன இடியோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத்தோட
வானவில் தான் வரைஞ்சு இருக்கு
மனசுக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
கிள்ளி கிள்ளி தரும் உறவல்ல
அன்னை தானே இந்த வானம் போல
யாருக்கு தான் மனசு இருக்கு
மண்மணம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து வறட்சியில போச்சு நிலத்துக்கும் ஈரம் இல்லை
மழைதுளி வழி துணைக்கு வந்தா வறட்சியே இல்லை
விவசாயத்தில் ஏதும் தனிச்சு இல்லை
மண்ணின் வாசம் மழையின் சாரலும் சேர்ந்தது போல ....


ஓ!! ஆத்துல என்ன அயிரை மீன்
தினம் தினம் நாக்கு ருசி தேடும்
நகரத்துல யாரு அறிஞ்சா
சுவைகளை தான் யாரு புரிஞ்சா
விதை விதைக்குற கைதானே
உன்னை கேட்குது தினம் தோறும்
உன்னை வரவேற்க சிட்டு குருவியும்
புல்லும், மலரும் தயார் ஆச்சு
மழை சேற்றில் பரதம் ஆடும் உயிர் எல்லாம்
ஏறு பூட்டி உயிர் வளர்க்கும் உழவு எல்லாம்
மழைத்தூறல் படும்முன்னே
மழையின் மடியை தேடி ஓடும் குழந்தை போல....

பின் குறிப்பு : இது ஒரு பாடலின் இசையை தழுவி எழுதிய வரிகள். சில இடங்களில் தாளம், ராகம், சுதி சேரலைனா திட்டாதீங்க. ஏதோ என்னால முடிஞ்ச சின்ன முயற்சி. பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், முக்கியமா நம்ம தோட்டத்து மக்கள் எல்லாம் மன்னிசுருங்கோ. கடைசி வரை என்ன பாட்டுனு சொல்லலைனு பாக்குறீங்களா. சரி சொல்லுறேன்.

பாடல் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
படம் : பிதாமகன்

Thursday 5 July 2012

முதல் பரிசு வென்ற தொடர் கதை


வினையூக்கி நெடுங்கதை போட்டிக்காக நான் எழுதிய கீர்த்தனா - என் தோழிஎன் காதலிஎன் மனைவி என்ற என் தொடர் கதை முதல் பரிசை வென்றுள்ளது .


கீர்த்தனா – என் தோழி,என் காதலி என் மனைவி கதையை படிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday 4 July 2012

மழை போதுமே

கவிதை என்ற 
ஓர் வார்த்தை 
மட்டுமே மனதில்...
அமர்ந்தேன் 
என் வீட்டு முற்றத்தில்
நேரங்கள் மட்டுமே 
நகர்ந்தது..
என் எழுதுகோல் 
சிலையானது...

சிலைகள் நகருமா?
என்று கேட்கிறீர்களா!!!
நகர்ந்ததே..
முதல் துளி 
வெள்ளை தாளில் பட்டதும்...
மைத்துளி அல்ல 
மழைத்துளி...

இடியின் முழக்கங்கள் 
எழுது எழுது என்று
அச்சுறுத்தினாலும்
மழையின் சாரல்
மனதை
மகிழ்வித்தது...

குற்றால அருவிக்கு 
கூட்டி செல்ல
என் அப்பாவை
இம்சித்த ஞாபகம்...
பயண அலுப்பே
இல்லாமல் 
அருவியே பயணம் செய்து
என் வீட்டிற்கே
வந்தது!!!

வர்ண பகவானின்
வர்ண ஜாலமோ!!! 
என் ஆசையை
நிறைவேற்றினாரா!!!
என் அப்பாவை
காப்பாற்றினாரா!!!

அட கடவுளே!!!
மின் தடையுமா
என் கவிதை கிறுக்கலை
சோதிக்க வேண்டும்!!
மின்சாரம் இல்லாவிட்டால் என்ன?
மின்னல் ஒளி
போதுமே எனக்கு!!!

யார் அந்த ஓவியன்
வானத்தில் அழகாக
வண்ணம் தீட்டியிருக்கிறானே!!!
என் எண்ணங்களை 
கவிதையாய் தீட்ட
இவையாவும் போதுமே எனக்கு!!!

Friday 8 June 2012

பூ - உரையாடல்

கதாபாத்திரங்கள்: மல்லிகை, ரோஜா, துளசி, கனகாம்பரம், முல்லை, பிச்சி, உலக அழகி.

உரையாடல் கரு: தங்களுக்குள் சிறந்தவர், அழகானவர், உயர்ந்தவர் யார் என்ற போட்டி ஏற்படுகிறது.

ரோஜா: ஊட்டியோட ராணி நான் தான். எனக்கு எத்தனை வண்ணம் தெரியுமா? என்னை பார்க்கிறதுக்காகவே எத்தனை பேர் ஊட்டி வராங்க தெரியுமா? மலர் கண்காட்சியில எனக்கு எப்பவுமே தனி இடம் தான். எத்தனை வாசனை திரவியங்கள் என்னால் உண்டானது தெரியுமா? இத்தனை சிறப்பையும் பெற்ற நானே சிறந்தவள்!.

மல்லிகை: ஊட்டியோட உன் ஆட்டம் எல்லாம் முடிந்தது. கோவில் மாநகரம் மதுரை மாநகரத்தின் இளவரசி நான். நான் இல்லாத ஒரு கல்யாணம், காதுகுத்து, வளைக்காப்பாவது உண்டா!!! என்னால் உண்டான வாசனை திரவியங்களே மிகுந்த மணம் உடையது.

கனகாம்பரம்: வெள்ளை நிறமான நீ என்ன அவ்வளவு அழகா? என்னையும் உன்கூட சேர்த்து வைக்கிறதால தான் நீ கொஞ்சமாவது அழகா இருக்க!!! மத்தபடி கல்யாணமோ, காதுக்குத்தோ எனக்கு தான் முதலிடம்.

பிச்சி: இவங்க எல்லாம் அழகை பேச வந்துட்டாங்கப்பா. வெள்ளை நிற பூக்களிலேயே நான் தனியான இடத்தை பிடிச்சுருக்கேன். மலர்ந்ததும் நான் கொடுக்கிற வாசனையோ வாசனை தான். இந்த கழுதைகளுக்கெல்லாம் எங்க என் வாசனை தெரிய போகுது?

முல்லை: இந்த பொண்ணுங்க எல்லாம் உடம்பை கட்டுக்கோப்பா வைக்க எவ்வளவு சிரம படுறாங்க!! ஆனால் எனக்கு அந்த கஷ்டமே இல்லை. இயற்கையிலே நான் அப்படி தான். நான் இதை சொல்லியே ஆகணும். நான் அவ்வளோ அழகு. யாரும் இங்க என்னை விட அழகான பூவை பார்த்திருக்க மாட்டாங்க!!!

துளசி: இவங்க எல்லாம் ஏன் இப்படி சண்டை போட்டுகிறாங்க? என்னை தானே கோவில்ல சாமிக்கு மாலையா போட்டு பிரசாதமா கொடுக்கிறாங்க. வீட்டுல துளசி மாடம் வைத்து என்னை தானே வழிபடுறாங்க!!! அப்பவே தெரிய வேணாம்!! நான் தான் சிறந்தவள்.

ரோஜா: என்னை கூட தான் சாமிக்கு மாலையா போடுறாங்க.
மல்லிகை உட்பட பிற பூக்கள்: எங்களையும் தான் சாமிக்கு சமர்ப்பிக்கிறாங்க.

ரோஜா: சரி. சரி. நமக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு சிறந்த
நடுவர் வேணும்.

மல்லிகை: ரோஜா சொல்றது சரி தான். நம்மை எல்லாம் உபயோகப்படுத்தி அழகுப்படுத்திக்கிறது பெண்கள் தான். அதனால உலகத்திலே சிறந்த அழகிக்கிட்ட போய் யார் சிறந்தவர்கள்னு முடிவு பண்ணுவோம்.

பிற பூக்கள்: சரி வாங்க. போகலாம்!!!

உலக அழகி: என்ன எல்லா பூவும் ஒன்றாக சேர்ந்து வந்துருக்கீங்க?

துளசி: எங்களுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.

உலக அழகி: அப்படி என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?

ரோஜா: யார் சிறந்தவள் என்ற போட்டி எங்களுக்குள்ள? முடிவை தெரிஞ்சுக்க தான் உங்கக்கிட்ட வந்தோம்.

உலக அழகி: [(மனக்குரல்) என்ன சொல்றது. எல்லா பூவுமே அழகு தான். இருந்தாலும்.... நாம தானா சிறந்தவள்]

துளசி: என்ன யோசிக்கிறீங்க. பதில் சொல்லுங்க...

உலக அழகி: ஓ. சொல்லுறேன். உங்க எல்லோரையும் அணிந்து கொள்கிற தகுதியும், திறமையும் உள்ள நான் தான் சிறந்தவள்.

மலர்கள் அனைத்தும் ஏமாற்றத்துடன் தோட்டம் திரும்பின.

பிச்சி: இதுக்கு தான் நாம மனிதர்களிடத்தில் நியாயம் எதிர்பார்க்கக் கூடாது.

முல்லை: நம்மை பயன்படுத்தி அழகுப் படுத்தி கொள்கிற அவளுக்கே அவ்வளவு கர்வமா? அப்போ நமக்கு எவ்வளவு இருக்கும்?

ரோஜா: உலக அழகி, பிரபஞ்ச அழகி, இந்திய அழகி, மாநில அழகி, உள்ளூர் அழகினு போட்டி அதிகமா இருக்கிற காலத்தில நாம வேற போட்டிக்கு வரோம்னு தெரிஞ்சா இந்த பொண்ணுங்க சும்மா இருக்க மாட்டாங்க.

மல்லிகை: நமக்குள்ள போட்டி,, பொறாமை எதற்கு? இயற்கையோட படைப்பில் நாம எல்லோருமே ஒவ்வொரு வகையில் அழகானவர்கள், மணமானவர்கள், சிறந்தவர்கள் தான்.

பிற மலர்கள்: நாட்டாமை!!! தீர்ப்பை மாத்திடாத!!!

கல்லூரி காதல் (பூ)


கல்லூரி சாலையில்
உன்னை கடந்த போது
உன் ஸ்பரிசம்
என் கவனத்தை ஈர்த்தது...

அன்று முதல்
ஒவ்வொரு நாளும்
உன் அழகை
ரசிக்க தவறியதில்லை...

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
உன் வளர்ச்சி கண்டு
ஏங்குவோர் பலர்....

உன் இதழ்களின் அசைவினில்
காதலை உணரும் வேளையில்
இதழ்களை மூடிக் கொண்டாய்..
இது என்ன இன்ப விளையாட்டு?

உன் இதழ்கள் மீது
அமர்ந்திருந்த தேனீக்களிடம்
எனக்கு வந்தது
பொல்லாத கோபம்…

கோபம் பொறாமையாக மாறி
சூழ்ச்சியும் செய்து
அந்த வித்தையை
கற்றேன் தேனீயிடம்

இன்று உன் இதழ் மீது
தேனீக்கள் இல்லை..
இடமாற்றம் செய்து
என் இதழ் வந்தது...

கல்லூரி வந்து செல்லும்
நேரம் போதவில்லை எனக்கு
எப்போதும் உன்னுடன்
இருக்கும் வரம் வேண்டினேன்...

வீட்டிற்கு உன்னை அழைத்து
செல்ல திட்டமிட்டேன்...
பெற்றோர்கள் தான் வல்லவர்களாயிற்றே
காதலை பிரிப்பதில்!!!

என் பெற்றோர் மட்டும்
விதி விலக்கா என்ன!!
உன்னை வளர்ப்பதே போதும்
உனக்காக இது வேறா என்றார்கள்!!!

ஏதும் ஏறவில்லை மண்டையில்
பெற்றோரிடம் சண்டையிட்டேன்
என் காதலுக்காக
இன்று நீ என் இல்லத்தில்!!!

தினமும் கண் விழிப்பதே
உன் முகத்தில் தானே!!
எத்தனை பேருக்கு
இந்த பாக்கியம் கிட்டும்!!!

உன் மீதான காதலை
யாராலும் பிரிக்க முடியாது
என்றென்றும் வாழ்வேன்
உன்னுடன் இன்பமாக!!!

குறிப்பு : மே மாதம் தமிழ் தோட்டம் தளத்தில்  பூ என்ற தலைப்பில் நடைபெற்ற    கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த என் கவிதை ...




Friday 1 June 2012

காலத்திற்கு ஏற்ற மாற்றம்

பிச்சைக்காரன்: ஐயா பிச்சை போடுங்கய்யா.  

வீட்டுக்காரர்: வந்திருவீங்களே. திருவோட எடுத்துக்கிட்டு!!!. காலம் மாறினாலும் நீங்க மாற மாட்டீங்களா?

பிச்சைக்காரன்: சரி. இந்தாங்கய்ய..

வீட்டுக்காரர்: என்ன? என்ன நம்பர் இது?

பிச்ச்சைக்காரர்: என் பேங்க் அக்கவுண்ட் நம்பர். ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் பண்ணிடுங்க..    

வீட்டுக்காரர்: ????  

பூக்கள் பேசினால்

தமிழ் தோட்டம் தளத்தில் நடைபெற்ற நகைச்சுவை போட்டியில் முதல்
பரிசை பெற்ற என் நகைச்சுவை


சில நேரத்துல நாம பூவுக்கு வாய் இருந்தா அழுதுரும்னு சொல்லுவோம்ல. அது மாதிரி பூவுக்கு வாய் இருந்திருந்தா என்ன எல்லாம் பேசியிருக்கும்னு சின்னதா ஒரு கற்பனை

1. வீட்டில் வளர்க்கப்பட்ட பூச்செடிக்கு சில நாட்களாக தண்ணீர் ஊற்றவில்லை.
பூ: பக்கி!! அது மட்டும் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸா அடைக்குது. எனக்கு பச்சை தண்ணியை கூட கண்ணுல காட்டமாட்டிக்குது. 

2. ஒருவன் முதன் முதலாக காதலை சொல்ல ரோஜா கொடுத்தான். அவன் காதலியோ அதை தூக்கி எறிந்தாள்.
பூ: உங்க சண்டைல என்னை ஏன் டி தூக்கி எறிஞ்ச?

3.பூங்காவில் காதலிக்காக காத்திருக்கும் காதலன் பூக்களை ஒவ்வொரு இதழாக பிரித்து போட்டுக் கொண்டிருக்கின்றான்.
பூ: ஏன் டா? உன் காதலி வரலைனா என்னை இப்பிடியா கொடுமைப்படுத்துவ?

4. போட்டியில் வெற்றி பெற்ற ஒருவன் தனக்கு போட்ட மாலையை கழட்டாமல் வீடு செல்கிறான்.
பூ: ஒத்துகிறேன். நீ ஜெயிச்சு ஜெயிச்சு மாலை வாங்கிட்டனு.

5. திருமணத்தில் மணப்பெண் பூக்களின் எடை தாங்காமல் அலுத்துக் கொள்கிறாள்.
பூ: என்னோட ஒரு தோட்டத்தையே அழிச்சு தலையில வச்சுக்கிட்டதுக்கு நான் தான் அலுத்துக்கணும்.

6. புதிதாக திருமணமானவன் தன் மனைவிக்கு பூ வாங்கிக் கொண்டு செல்கிறான். 
பூ: அதான் அது அதுக்கு ஆள் வேணும்றது. இத்தனை நாள் என்னை திரும்பி பார்த்திருப்பியா?

7. மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் பூ
பூ: என்னை ஏன் டா இப்பிடி குறுகுறுகுறுனு பாக்கிறீங்க? எனக்கு வெட்கமா இருக்கு.

8.நோயாளிக்கு கொடுக்கும் பூங்கொத்து. 
பூ: அவனே உடம்புக்கு முடியாம இருக்கான். ஆப்பிளோ, ஆரஞ்சோ வாங்கி கொடுத்தா ஜூஸ் போட்டுக் குடிப்பான். என்னை ஏன் டா கொடுக்கிறீங்க?

9. இறந்த வீட்டில் பிணத்தின் கழுத்தில் இருக்கும் மாலை
பூ: நீங்க எல்லாம் நாறாம இருக்க என்னை ஏன் டா இப்பிடி நாறடிக்கிறீங்க?

10. கடவுளுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலை
பூ: அப்பாடா!! எனக்கு சொர்க்கம் தான்.

பூவாகிய நான்


ஒரு பூ எழுதும் கவிதை


Wednesday 30 May 2012

கவிஞன் ஆகலாம்

தமிழ் நண்பர்கள் தளத்தில் நடந்த சித்திரை மாத பதிவு போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற என் கவிதை

Tuesday 29 May 2012

பாட்டு பாட வா




இசைஞானி மீது இஷ்டமானால்
கண்ணதாசன் உடன் காதலானால்
பாலசுப்பிரமணியம் பார்த்து பரவசமானால்
(மைக்)மோகன் மேல் மோகமானால்
பட்சிகளும் பாட்டு பாடும்
கானகுயில்களும் கானா பாடும்
பஞ்சவர்ண கிளியே நீ பாடகி ஆக மாட்டாயா!!!

Friday 25 May 2012

வேண்டாம் மழலையே



பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட 
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு 
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள் 
செல்லங்களே!!!

மழை மகள்


வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
மழலை போல்
ஆடும் பெண்ணே!!!
மழை நின்றாலும்
என் மனதில்
நீ ஏற்படுத்திய
காதல் மழை
ஓயவில்லை...
காதல் மழையில்
நனைய
வருவாயா கண்ணே!!!!!!!!!!!

Thursday 24 May 2012

காதல் தேவதை





காதல் வரம் வேண்டி
இதய தொட்டில் கட்டிய
காதல் பக்தர்களுக்கு
வரம் அருள வந்த
காதல் தேவதையே!!

உண்மை காதலுக்கு மட்டும்
உன் அருளை பொழிந்து
காலம் முழுதும்
சகல சௌபாக்கியங்களை பெற்று
வாழ வாழ்த்துவாயாக!!!

அழகி நீ!!!





காந்த பார்வை கொண்டவளா நீ
சாந்த பார்வை கொண்டவளா நீ
முத்து முத்து பல் அழகியா நீ
நெஞ்சை அள்ளும் சொல் அழகியா நீ 
புன்னகையின் அரசியா நீ
நல்நகையின் இளவரசியா நீ 
நாணத்தில் மலரும் பூங்கொத்தா நீ 
வெட்கத்தில் சிவக்கும் பூச்செண்டா நீ 
பளிங்கு மேனி கொண்டவளா நீ
பரதம் ஆடும் மயிலா நீ 
பச்சை கிளியின் வண்ணமா நீ
இச்சை ஊட்டும் குயிலா நீ!!!!! 

Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி


வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 1.


வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 2.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 3.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 4.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 5.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 6.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 7.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 8.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 9.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 10.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 11.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -11


மறுநாள் அலுவலகம் சென்ற கீர்த்தி, கார்த்தியிடம் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூற கார்த்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா இருக்கும் நிலைமையில் இவளை பதிவு திருமணம் செய்வது கூட கடினம். மனமுடைந்திருக்கும் அவர்களுக்கு கீர்த்தி மட்டுமே ஆதரவு. திருமணம் நடக்க வேண்டும் எனில் அது கீர்த்தனா அம்மாவின் முழு சம்மதத்துடன் தான் என்பதை தெளிவாக உணர்ந்தான். மறுநாளே பிரச்சனையின் ஆணிவேரை தேடி சென்றான்.

புகைப்படத்தில் இருக்கும் ஒருவர், கார்த்தி அப்பாவின் நெருங்கிய நண்பர். அவரும் புதுச்சேரியை சார்ந்தவரே. அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் நண்பரான சாமிநாதன் பற்றிய விவரத்தை கேட்டான். அவர் கொடுத்த முகவரியோ, கீர்த்தனா கொடுத்த அதே பழைய முகவரியே. இந்த முகவரியில் அவர் தற்பொழுது இல்லை எனக் கூறி மேலும் சில விபரங்களை கேட்டான். சில நாட்களாகவே சாமிநாதனுடன் தொடர்பில் இல்லை என கூறவே அவரின் வேறு சில நண்பர்களின் விபரங்களோ, உறவினர் விபரங்களோ தரும்படி கூறவே அவரும் தனது பழைய டைரியை எடுத்து தேடி சாமிநாதனின் தங்கை முகவரி கொடுத்தார். அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தான் கார்த்தி. எதற்காக அவரை தேடுகிறார் என்று வினவ ஏதோ கூறி சமாளித்து விட்டு சாமிநாதனின் தங்கை வீட்டுக்கு சென்றான்.

அங்கு சாமிநாதனின் தங்கை மட்டும் இருக்கவே, அவர்களிடம் சென்று தான் சாமிநாதனின் நண்பரின் மகன் எனவும், அவரை தேடி பழைய இல்லத்திற்கு சென்றதாகவும் கூறி, அவரின் புதிய முகவரியை கேட்டான்.

“அண்ணன் இப்போ பாண்டிச்சேரியிலே இல்லை பா. குடும்பத்தோட சொந்த ஊருக்கே போய்டாரு. காஞ்சிபுரத்துல இருக்காரு”.

“சரி ஆண்ட்டி.. நீங்க அட்ரஸ் குடுங்க. நான் அங்க போயி பாத்துகிறேன்.”

“இதோ இந்த பா. இந்த டைரி ல இருக்கு. எழுதிக்கோ பா”.

“தாங்க்ஸ் ஆண்ட்டி. அப்போ நான் கிளம்புறேன்”.

அங்கிருந்து நேராக காஞ்சிபுரத்திற்கு கிளம்பினான். காஞ்சிபுரத்தில் அவரின் முகவரியை தேடி ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என் பேரு கார்த்தி. இங்க சாமிநாதன்?”.

“நான் தான் சாமிநாதன். நீ யாருனு தெரியலையே தம்பி?”

“என்னை உங்களுக்கு தெரியாது. உள்ளே போயி பேசலாமா அங்கிள்?”

“சரி உள்ளே வா பா. என்ன விஷயம் னு சொல்லு?”

“உங்க ஃப்ரெண்ட் ஜெய்சங்கர் என்ன ஆனார்னு தெரியுமா? அவரு குடும்பம் என்ன ஆச்சுனு தெரியுமா?”

“ஹேய் நீ யாரு? உனக்கு என்ன வேணும்? ஜெய்சங்கர் ஆ? அப்பிடி ஒரு ஃப்ரெண்ட் எனக்கு இல்லை.”

“அது தானே. அவரை ஃப்ரெண்ட் ஆ நினைச்சுருந்தா நீங்க ஏன் அவரை ஏமாத்த போறீங்க? அசிங்கமா இல்லையா சார்? இப்பிடி பண்ணிட்டீங்களே!! நீங்க பண்ணுண வேலையால அவர் இறந்துட்டார். அவர் குடும்பமே இப்போ ஊரை விட்டே போயிட்டாங்க. மனசாட்சியே இல்லையா சார்?”

“ஓவரா பேசாத தம்பி. நீ உன் வேலையை பாத்துக்கிட்டு போ.”

“போக முடியாது சார். நீங்க அவர்கிட்ட ஏமாத்துன பணம் திரும்ப வேணும். அவர் உயிரை தான் திரும்பி கொடுக்க முடியாது. அட்லீஸ்ட் அவர்கிட்ட ஏமாத்துன பணம் எனக்கு வேணும் சார்”.

“இங்க இருந்து நீ உயிரோட போன தானா டா. இந்த ஊர் முழுக்க என் ஆள்கள் இருக்காங்க. உயிர் வேணும்னா ஒழுங்கா ஓடிடு. பணம் அது இதுனு பேசுன அநியாயமா 
உன் உயிரும் போய்ரும்”.

“ஓ. அப்பிடியா!! என் உயிர் போனா நீங்க மொத்தமா வாழ்நாள் ஃபுல் லா ஜெயில்ல களி சாப்பிட வேண்டியது தான்.”

“என்ன டா ஓவரா பேசற?”

“ சரி நான் பேசலை. நீங்க அப்பிடியே உங்க வீட்டுக்கு வெளிய போயி  சுத்தி எத்தனை போலீஸ் நிக்கிறாங்கணு பாருங்க”.

கார்த்தி வெளியில் நின்ற போலீஸை அழைத்து சாமிநாதனை அரெஸ்ட் செய்யும்படி கூற, சாமிநாதனும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டான். கீர்த்தனாவுக்கு கால் பண்ணி தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் காவல்நிலையம் வரும்படி அழைத்தான். முறையாக கீர்த்தனா கொடுத்த கம்ப்ளைண்ட் பேரில் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவனிடம் இருந்து பணம் காவல் துறையால் மீட்டுக் கொடுக்கப்பட்டது. கீர்த்தனாவின் அம்மா கார்த்தியின் செயலை பார்த்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டினாள்.

கீர்த்தனாவுக்கு கார்த்தியை விட தன்னால் நல்ல மாப்பிளை பார்க்க முடியாது என்பதை மனதார உணர்ந்த அவள் தாய் கீர்த்தனாவிடம் கார்த்திக்கு வீட்டுக்கு சென்று வருவோம் என அழைத்தாள். கார்த்தி வீட்டிற்கு சென்று திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம் என வினவ அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அடுத்து வரும் முகூர்த்த தினத்திலேயே கீர்த்தனா, கார்த்தி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நெருங்கிய உறவுகள், நண்பர்கள் என அழைப்பிதழ் கொடுக்கும் வரிசையில் கார்த்தியின் முன்னாள் காதலிகளான ஜெனி, ரம்யாவும் இருந்தனர். திருமண ஏற்பாடுகளும் மிக அருமையாக நடந்துக் கொண்டிருந்தது.

கீர்த்தி அப்பாவின் ஆசைப்படி கீர்த்தனா வாழ ஒரு புது வீடு வாங்கும் படி கீர்த்தனா அம்மா கூற, அதன்படி ஒரு அழகிய வீடு வாங்கப்பட்டது. அனைவரும் எதிர்ப்பார்த்த கார்த்தி, கீர்த்தி திருமண நாளும் வந்தது. எவ்வித இன்றி இரு வீட்டு பெரியவர்களும் வாழ்த்த நண்பர்கள், பழைய காதலிகள் வருகையுடன் திருமணம் இனிதே முடிந்தது. திருமணம் முடிந்த கையுடன் புது இல்லத்தில் குடியேறினார். கீர்த்தனாவுக்கான முதல் முத்தத்தை எவ்வித தடையும் இன்றி கொடுத்தான் கார்த்தி.

பிரிந்திருந்த நேரங்களில்
நிலவில் என்னை கண்டாய்
சேர்ந்து விட்ட நேரத்தில்
என்னில் நிலவை கண்டாய்
இனி ஒரு போதும்
உன்னை பிரிய மனமில்லை
நீ இல்லாத ஒரு
கனவும் இனி இங்கில்லை”.

கீர்த்தனா என்றென்றும் கார்த்தியின் தோழி, காதலி, மனைவி....

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -10


அந்த வார கடைசியில் கார்த்தி இல்லதிற்கு கீர்த்தியும், அவள் அம்மாவும் சென்றனர். வழக்கத்தை விட அதிக உபசரிப்புடன் வரவேற்றனர். கார்த்தியின் அம்மாவும், அப்பாவும் மெல்ல பேச்சை ஆரம்பித்தனர்.

“என்ன சென்னை பிடிச்சுருக்கா? வீட்டு பக்கத்துலே எல்லா வசதியும் இருக்கா?”

“ம்ம். எல்லா வசதியும் இருக்கு. கீர்த்தனாவே எல்லாம் வாங்கிட்டு வந்துருவா. நான் பொதுவா வெளிய போறதே இல்லை.

“அதான். உங்களை இங்க கூட்டிட்டு வர சொன்னோம்.”

“உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியலை. கீர்த்தி அப்பா இறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் முன்னாடி நின்னு செய்யுறது உங்க புள்ளை தான். சொந்த காரங்களே 2 நாள் இருந்துட்டு போனது தான். அதுக்கு அப்புறம் எங்களை திரும்பி கூட பாக்கலை. இதுக்கு எல்லாம் நாங்க என்ன கைமாறு செய்ய போறோம்.”

“இதுல என்ன இருக்கு மா. நாங்களும் உறவு மாதிரி தான். கீர்த்தி கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க.”

“என்ன பண்றதுணு தெரியலை. இவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்காமலே அவரு போய் சேந்துட்டாரு. சொந்தக்காரங்களும் கூட இல்லை. எல்லாம் என் தலையில பெரிய பொருப்பா வந்துருசுங்க.”

“இந்த நிலைமையில இந்த விஷயத்தை பேச கஷ்டமா தான் இருக்கு. ஆனா ஒரு துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடத்துறது நல்லது தானா,”

“ நீங்க என்ன சொல்ல வரிங்கணு புரியலை”.

“சரி சுத்தி வளைக்காம நேராவே கேக்குறேன். கீர்த்தியை எங்க வீட்டு மருமகளா ஆக்கிகிற நினைக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க?”.

“திடீர்னு இப்பிடி கேக்குறிங்க. இருந்தாலும் நான் கீர்த்தியை ஒரு வார்த்தை கேக்கணும்.”
“இப்பவே சொல்லனும்னு இல்லை. வீட்டுக்கு போய் நல்லா யோசிச்சு கூட சொல்லுங்க.”

“சரிங்க. அப்போ நாங்க கிளம்புறோம். என்னது. கிளம்புரிங்களா.? மதியம் சாப்பாடு இங்க தான். இருங்க. பாதி சமையல் ல போட்டு வந்துட்டேன். நான் போய் சமைக்கிறேன்.”

“நானும் வரலாமா சமையல் அறைக்கு?

“ஓ!! தாராளமா. வாங்களேன். “

இருவரின் அம்மாவும் சேர்ந்து சமைத்து, எல்லோரும் ஒன்றாக மகிழ்வுடன் உணவு உண்டனர். உணவிற்கு பின் கார்த்தியின் அம்மா, கீர்த்தியையும், அவள் அம்மாவையும் வீட்டை சுற்றி காட்டுகிறேன் எனக் கூறி அழைத்துச் சென்றாள். அப்போது தான் எதிர்பாராத விதமாக சுவரில் மாட்ட பட்டு இருந்த அந்த புகைபடத்தை பார்த்தாள் கீர்த்தியின் அம்மா. பார்த்ததுமே முகம் எல்லாம் மாறி வியர்த்தது. படபடவென்று வந்ததை உணர்ந்த அவள் அங்கேயே அமர்ந்தாள்.

“அம்மா, அம்மா!! என்ன ஆச்சு அம்மா?”

“அம்மாவுக்கு திடீர்னு என்ன ஆச்சு மா கீர்த்தி?”

“தெரியலை ஆண்ட்டி. கொஞ்சம் தண்ணி கொண்டு வரிங்களா?”

“இதோ இருக்கு மா”.

தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தாள். ஹாஸ்பிடல் போகலாமா அம்மா?

“இல்லை கீர்த்தி. வேணாம். அந்த போட்டோவை பாரு மா”.

“இவரா? ஆண்ட்டி இவர் யார் ஆண்ட்டி? அங்கிள் பக்கத்துல நிக்கிறாரே?”

“ஒருத்தர் அங்கிள் ஃப்ரெண்ட். இன்னொருத்தர் அவர் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட் மா. எதுக்கு கேக்குற?”

“அது வந்து ஆண்ட்டி!!! அவர் தான் எங்க அப்பாகிட்ட வீடு வாங்கி தரேனு சொல்லி பணத்தை ஏமாத்திட்டு போனார். எங்க அப்பாவோட சாவுக்கு காரணமே அவர் தான்.”

“சாரி மா. நீ சொல்றவர் யாருனே அங்கிள்க்கு தெரியாது.”

“சரி ஆண்ட்டி. நாங்க கிளம்புறோம். அம்மா ரொம்ப டென்ஷன் ஆ இருக்காங்க”.

“சரி மா. பாத்து போங்க. அடிக்கடி அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வா மா”.

“சரி ஆண்ட்டி”.

வீட்டுக்கு சென்றதும் “கீர்த்தனா எனக்கு இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்லை அம்மா. அவங்க வீட்ல எதுக்கு தெரியாத ஒருத்தன் போட்டோவை மாட்டி வைக்க போறாங்க. இவங்களுக்கும், அந்த ஆளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும்னு எனக்கு தோணுது மா”
“ச்சா. அப்பிடி இருக்காது மா. அவங்க நல்ல குடும்பம் தான் மா”.
“எனக்கு பிடிக்கலை மா. இதோட இந்த பேச்சை விட்டுடலாம்.”