Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -4


கார்த்தியிடம் நடந்த ஒவ்வொன்றாக கூறினாள். “அப்பா என் கல்யாணத்திற்குனு சேர்த்த சேவிங்ஸ்ல இருந்து ஒரு பெரிய அமெளண்ட் ட வச்சு என் பெயர் ல ஒரு ஃப்ளாட்ஸ் வாங்கி அதை என் மேரேஜ் கிஃப்ட் டா கொடுக்கணும்னு ஆசை பட்டுருக்கார். அதற்கு எங்க பேமிலி ஃப்ரெண்ட் சாமிநாதன்னு ஒரு அங்கிள் ட சொல்லி வீடு எல்லாம் முடிவு பண்ணி ரிஜிஸ்டிரேசன் பண்ண இருந்தாங்க. அப்பா அதுக்கு தான் என்ன கால் பண்ணி வர சொன்னாரு. நானும் போனேன்.

மறுநாள் காலையில நான், அப்பா, அம்மா 3 பேரும் ரிஜிஸ்டிரேசன் ஆபிஸ்க்கு கிளம்பி போனோம். அங்க சாமிநாதன் அங்கிள் வரலை. உள்ள போய் விசாரிச்சப்ப  தான் தெரிஞ்சது. அப்பிடி ஒரு ரிஜிஸ்டிரேசன் நடக்கலைனு. அப்பா உடனே சாமிநாதன் அங்கிள்க்கு கால் பண்ணி பாத்தார். அவரோட நம்பர் ஸ்விட்ச் ஆஃப் லே இருந்தது. சரி நீங்க 2 பேரும் வீட்டுக்கு போங்கணு சொல்லிட்டு அப்பா சாமிநாதன் அங்கிளா பாக்க அவர் வீட்டுக்கு போனார். அவர் முதல் நாள் நைட் தான் வீட்டை காலி பண்ணிட்டு ஊரை விட்டு போய்ட்டாருனு பக்கத்து வீட்டுல இருக்கவங்க சொல்லிருக்காங்க. என் லைஃப்க்கு சேர்த்து வச்ச பெரிய அமெளண்ட்ட இப்பிடி இழந்துட்டோமேனு மனசு ஓடைஞ்சு போயிட்டாங்க. அதோட அந்த சாமிநாதன் அங்கிள் இப்பிடி பண்ணுவாருனு அப்பா கொஞ்சம் கூட எதிர் பாக்கலை. ரொம்ப நொந்து போய்ட்டாரு.

“பொழுதுகள் கடந்து சென்றாலும்
துயரங்கள் மறையவில்லை
மேகங்கள் கலைந்த பின்னும்
கண்ணீர் மட்டும் பொழிகிறதே
சோகங்கள் தாங்க என்னவளுக்கு
தோள்கள் கொடுத்தேன் சாய்வதற்கு”.

மறுபடி அழுக ஆரம்பித்த அவளை மடியில் படுக்க வைத்து சமாதான படுத்தினான். “நீயே இப்பிடி அழுதுக்கிட்டே இருந்தா ஆண்ட்டிய யாரு சமாதான படுத்துவா? கீர்த்தி நீ குழந்தை இல்லை. நிலைமையை புரிஞ்சுக்கோ. இனி நடக்க வேண்டியதை நீ தான் பாக்கணும். அங்கிளோட ஆபிஸ்ல போய் ஃபார்மாலிட்டீஸ் முடிக்கணும். அப்புறம் எத்தனை நாள் இப்பிடி வீட்டுல இருக்கப் போற? பேசாம ஆபிஸ் போய் வொர்க் பண்ணு. அப்போ தான் எல்லாத்தையும் மறந்து பழைய நிலைமைக்கு வருவா. ஆண்ட்டியை இங்க தனியா விட்டுட்டு வராதே. அவங்களையும் சென்னைக்கு கூட்டிட்டு வந்துரு.”

அவன் சொன்னதில் இருந்த நியாயம் புரிய அவளும் எழுந்து தன்னம்பிக்கையுடன் குளித்து விட்டு வேலைகளை தொடங்கினாள். கார்த்தியின் ஆலோசனையை ஏற்று அம்மாவிடம் சென்று சென்னை செல்வதை பற்றி பேசினாள். 10, 15 தினங்களுக்குள் எல்லா வேலையையும் முடித்து புதுச்சேரியை விட்டு செல்வது என முடிவு செய்தனர். கார்த்தியும், அவன் அம்மாவும் சென்னை செல்வதாக கிளம்பினார்கள். கீர்த்தியின் அம்மா கண் நிறைய கண்ணீருடன் தன் நன்றியை தெரிவித்தாள். கார்த்தியின் அம்மா அவர்களை சமாதானப் படுத்தி அமர செய்து கிளம்பினார்கள். கார்த்தி ஒரு வாரத்தில் திரும்ப வருவதாகவும்,, வீடு காலி செய்து சென்னை செல்ல உதவுவதாகவும் கூறி வந்தான்.
வீட்டில் இருந்து வெளியே வந்த அவன் அம்மா “ என்ன டா கார்த்தி? நீ வெளிநாடு போகலையா? அடுத்த வாரமும் இங்க வரேனு சொல்லிட்டு வர்ற? என்ன தான் நினைச்சுட்டுருக்க உன் மனசுல?”.

அம்மா என் இப்போ கத்தற? நான் சொல்றதை பொறுமையா யோசி. இப்பிடி ஒரு நிலைமைல எப்பிடி மா என்னால வெளிநாடு போக முடியும்? கீர்த்தியை பத்தி யோசிச்சு பாரு மா.”

“என்ன டா யோசிக்க இருக்கு. ஃப்ரெண்ட் னா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு டா. அதான் 4 நாள் இருந்து எல்லா உதவியும் பண்ணிட்டோம்ல. இனிமேல் எல்லாத்தையும் 
அவளே பாத்துப்பா. நீ ஒழுங்கா உன் படிப்பை பாரு”

“அம்மா கீர்த்தனா என் ஃப்ரெண்ட் மட்டும் இல்லை. அவள் தான் மா உன் மருமகள். இந்த நிலைமைல அவளை தனியா விட்டுட்டு போக மனசு இல்லை மா. என்னை மன்னிச்சுரு மா.”

““டேய் கார்த்தி என்ன டா சொல்லுற? காதல் எல்லாம் நம்ம வீட்டுக்கு சரியா வருமா?”

““எல்லாம் சரியா வரும் மா. நீ தான் அப்பாகிட்ட பேசணும்.”

“டேய் கார்த்தி. என்ன டா இப்பிடி குண்டை தூக்கி போடுற?ஒழுங்கா வெளிநாடு போற வழியை பாரு. காதல், கல்யாணாம்னு சொல்லிக்கிட்டு இருக்காதே. உங்க அப்பாவை என்னால சமாளிக்க முடியாது.”

“ஏன் மா இப்பிடி பேசுற? கீர்த்தனாவுக்கு என்ன குறை? நீயே 4 நாளா பாத்துட்டு தானா இருந்த? ரொம்ப நல்ல பொண்ணுமா. நீயே தேடுனாலும் இப்பிடி ஒரு குணமான பொண்ணு கிடைக்காது மா. நல்லா படிச்சுருக்கா. என்கூட தான் வொர்க் பண்றா. நல்லா அழகான பொண்ணு. எல்லாத்துக்கும் மேல நானும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லைஃப் நல்லா இருக்கும் மா. உன் மனசை தொட்டு சொல்லு. அந்த பொண்ணை உனக்கு பிடிக்கலையா மா?”

“பிடிச்சுருக்கு டா. ஆனா உங்க அப்பா என்ன சொல்லுவாரோ?”

“உனக்கு பிடிச்சுருக்குள்ள அம்மா. அப்பாவுக்கும் பிடிக்கும் அம்மா. நீ பேசு அப்பாகிட்ட. அப்பா புரிஞ்சுப்பார். பிளீஸ் அம்மா.”

“சரி பேசலாம். ஆனா வெளிநாடு மேற்படிப்புக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்கும் போது இப்பிடி போக மாட்டேனு சொல்லுறியே டா. அப்பாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு”.

“இப்போ வெளிநாட்டு மேற்படிப்பை விட கீர்த்தனா சந்தோஷம் தான் முக்கியம் அம்மா. அப்பாவை இழந்து நிக்கிற அவ குடும்பத்துக்கு நாம தான் மா ஆறுதலா இருக்கணும். நானும் இப்போ வெளிநாடு போய்ட்டா அவ மனசு ஓடைஞ்சு போயிருவா அம்மா.”

“சரி டா தம்பி. உன் வாழ்க்கைக்கு நல்லதா பட்டதா தான் சொன்னேன். மத்தபடி உன் விருப்பம் தான் முக்கியம். அப்பாகிட்ட நான் பேசுறேன்”.


“ரொம்ப தாங்க்ஸ் அம்மா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ பேசுனா அப்பா புரிஞ்சுப்பார்.”

No comments:

Post a Comment