Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -7


மறுநாளே வேலையில் சேர்ந்தாள் ஜெனி. இவன் கெட்ட நேரமோ என்னவோ கீர்த்தனாவின் அருகில் இருந்த இருப்பிடத்தில் தான் ஜெனியின் இருக்கை. கார்த்தியின் புதிய காதலி என்று தெரியாமலே ஜெனி கீர்த்தனாவோடு உறவாட ஆரம்பித்தாள். அது கார்த்திக்கு சற்றும் பிடிக்கவில்லை.

“ஹாய். நான் ஜெனி. ஜெனிபர். நியூ அப்பாய்ண்ட்மென்ட். நீங்க?

“கீர்த்தனா. லாஸ்ட் 1 இயர் இங்க தான் வொர்க் பண்றேன்”.

ஜெனிக்கும் கார்த்திக்கு ஏற்பட்ட அதே உணர்வு ஏற்பட அதை கீர்த்தனாவிடம் தெரிவித்தாள்.“நீங்க பார்க்கிறதுக்கு என்ன மாதிரியே இருக்கீங்க. உங்களுக்கு அப்பிடி ஏதும் தோணலையா?”

“நீங்க சொன்ன பின்னாடி தான் கவனிச்சேன். எனக்கும் அப்பிடி தான் தோணுது”.
இதற்கு மேல் இவர்களை பேச விடக்கூடாது என்று தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்து வந்த கார்த்தி,

ஹாய் கீர்த்தனா. என்னங்க பிஸியா. நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா?”

“இல்லை கார்த்தி. சொல்லுங்க”

“காஃபி சாப்பிட்டுகிட்டே பேசலாமா. கேண்டீன் வரிங்களா?”

ஜெனியின் மனக்குரல்(அழகான பொண்ணை பார்க்க கூடாதே. உடனே வழிஞ்சுருவானே)

“ஓகே. கீர்த்தி. நைஸ் டூ மீட் யு. சி யு லேட்டர்”.

“ஓகே சூர் ஜெனி. பை”.

கேண்டீன் சென்ற இருவரும் காஃபி வாங்கி கொண்டு இருக்கையில் அமர்ந்தனர்.

“கீர்த்தி நீ அவள்கிட்ட அதிகமா பேச்சு வச்சுக்காத”.

“யாருகிட்ட கார்த்தி?”

“அதான் உன் பக்கத்துல இருக்காலே ஜெனி. அவள்கிட்ட தான்”

“ஏன் கார்த்தி? நீ இப்பிடி எல்லாம் சொல்ல மாட்டியே?”

“அது வந்து. கீர்த்தி அவ தான் என் ஃபர்ஸ்ட் லவ்வர் ஜெனி”.

“அவளா!!!!!! சரி கார்த்தி. நான் அதிகமா பேச்சு வச்சுக்கலை. ஆனா அவளா பேசும் போது அவாய்ட் பண்ண முடியாது.”

“ஓகே கீர்த்தி. பாத்து பேசு. அவ ஒரு மாதிரி”.

தொடர்ந்து வந்த நாட்களில் ஜெனியின் கவனம் கீர்த்தனா, கார்த்தி மீதே இருந்தது. இருவரும் காதலிக்கிறார்களோ என சந்தேகித்தவள் அதை உறுதி செய்ய பல முறை கீர்த்தனாவின் வாயை கிளறினாள். ஆனால் கீர்த்தனா ஜெனியின் கேள்விகளுக்கு பிடி கொடுக்கவில்லை. ஆனால் எப்படியாவது தெரிந்து கொள்ள முயற்சித்தாள் ஜெனி. ஒரு நாள் தன் அலைபேசியை மறந்து வைத்து விட்டதாகவும், அவசரமாக ஒரு கால் செய்ய வேண்டும் என கூறி கீர்த்தனாவின் அலைபேசியை கேட்டாள். கீர்த்தனாவும் அலைபேசியை கொடுத்து விட்டு தன் வேலைகளில் கவனமானாள். அலைபேசியை வாங்கி கொண்டு சென்று கீர்த்தனாவுக்கு தெரியாமல் அவளுக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே பெரும்பாலானவை கார்த்தியிடம் இருந்தே வந்திருந்தது. அதுவும் காதல் ரசம் பொங்க.. கார்த்தியின் காதலை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன தான் பிரிவு ஏற்பட்டு இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் இருந்த போசெஸ்ஸிவ்னேஸ் அவளை சங்கடத்தில் ஆழ்த்தியது.

காதலை தெரிந்து கொண்ட ஜெனி நிம்மதியாக இல்லை. ஏதோ ஒன்றை இழந்ததை போல உணர ஆரம்பித்தாள். அதன் பின் தன்னை விட்டு இவளை எப்படி திருமணம் செய்யலாம்? நடக்காது. நடக்க விட கூடாது என முடிவு செய்தாள். கார்த்தியிடம் சென்று பேசலாமா என்று யோசித்தாள். ஆனால் அதனால் பலன் ஒன்றும் இல்லை என தெரியும் அவளுக்கு. சரி வேற என்ன செய்யலாம். கீர்த்தனாவும் அவனை உருகி உருகி காதலிக்கிறாள். அவளிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. ஆனால் எனக்கு என் பழைய காதல் மீண்டும் வேண்டும். அதற்காக நான் எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டேன் என்று முடிவு செய்தாள்.

வேறு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தவள் அவர்களுக்குள் பிரிவை உண்டாக்க வேண்டும். தானாக பிரிந்தால் தான் அவள் கார்த்தியுடன் சேர முடியும் என முடிவெடுத்தவள் கீர்த்தனாவின் இல்லத்திற்கு பெயர் இல்லாத ஒரு மொட்டை கடிதம் போட தயாரானாள். அந்த கடிதம் கீர்த்தனாவின் அம்மா, அப்பா கையில் கிடைத்தால் இவர்கள் காதலுக்கு முற்றுப் புள்ளி கிடைக்கும் என நம்பி அந்த வேலையை துணிந்து செய்தாள்.அவளின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறியது.

No comments:

Post a Comment