Friday 20 July 2012

மழை பாடல்



மானங்கருக்குதே வண்ண மயிலும் ஆடுதே
வறண்ட காட்டிலே ஆறும், குளமும் சிரிக்குதே
ஜனங்க பார்த்து ரசிக்குதே!!!
உழவன் மனசுல அறுவடை காலம் வந்ததே
மண் வாசம் வீசுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !!
இடியின் சத்தம் கேட்டு பிள்ளை மிரளுதே !!
அதையும் இசை என்று ஆக்கி நம்ம ஜனங்க பாடுதே!!

மின்னி மின்னி சின்ன இடியோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத்தோட
வானவில் தான் வரைஞ்சு இருக்கு
மனசுக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
கிள்ளி கிள்ளி தரும் உறவல்ல
அன்னை தானே இந்த வானம் போல
யாருக்கு தான் மனசு இருக்கு
மண்மணம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து வறட்சியில போச்சு நிலத்துக்கும் ஈரம் இல்லை
மழைதுளி வழி துணைக்கு வந்தா வறட்சியே இல்லை
விவசாயத்தில் ஏதும் தனிச்சு இல்லை
மண்ணின் வாசம் மழையின் சாரலும் சேர்ந்தது போல ....


ஓ!! ஆத்துல என்ன அயிரை மீன்
தினம் தினம் நாக்கு ருசி தேடும்
நகரத்துல யாரு அறிஞ்சா
சுவைகளை தான் யாரு புரிஞ்சா
விதை விதைக்குற கைதானே
உன்னை கேட்குது தினம் தோறும்
உன்னை வரவேற்க சிட்டு குருவியும்
புல்லும், மலரும் தயார் ஆச்சு
மழை சேற்றில் பரதம் ஆடும் உயிர் எல்லாம்
ஏறு பூட்டி உயிர் வளர்க்கும் உழவு எல்லாம்
மழைத்தூறல் படும்முன்னே
மழையின் மடியை தேடி ஓடும் குழந்தை போல....

பின் குறிப்பு : இது ஒரு பாடலின் இசையை தழுவி எழுதிய வரிகள். சில இடங்களில் தாளம், ராகம், சுதி சேரலைனா திட்டாதீங்க. ஏதோ என்னால முடிஞ்ச சின்ன முயற்சி. பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், முக்கியமா நம்ம தோட்டத்து மக்கள் எல்லாம் மன்னிசுருங்கோ. கடைசி வரை என்ன பாட்டுனு சொல்லலைனு பாக்குறீங்களா. சரி சொல்லுறேன்.

பாடல் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
படம் : பிதாமகன்

Thursday 5 July 2012

முதல் பரிசு வென்ற தொடர் கதை


வினையூக்கி நெடுங்கதை போட்டிக்காக நான் எழுதிய கீர்த்தனா - என் தோழிஎன் காதலிஎன் மனைவி என்ற என் தொடர் கதை முதல் பரிசை வென்றுள்ளது .


கீர்த்தனா – என் தோழி,என் காதலி என் மனைவி கதையை படிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday 4 July 2012

மழை போதுமே

கவிதை என்ற 
ஓர் வார்த்தை 
மட்டுமே மனதில்...
அமர்ந்தேன் 
என் வீட்டு முற்றத்தில்
நேரங்கள் மட்டுமே 
நகர்ந்தது..
என் எழுதுகோல் 
சிலையானது...

சிலைகள் நகருமா?
என்று கேட்கிறீர்களா!!!
நகர்ந்ததே..
முதல் துளி 
வெள்ளை தாளில் பட்டதும்...
மைத்துளி அல்ல 
மழைத்துளி...

இடியின் முழக்கங்கள் 
எழுது எழுது என்று
அச்சுறுத்தினாலும்
மழையின் சாரல்
மனதை
மகிழ்வித்தது...

குற்றால அருவிக்கு 
கூட்டி செல்ல
என் அப்பாவை
இம்சித்த ஞாபகம்...
பயண அலுப்பே
இல்லாமல் 
அருவியே பயணம் செய்து
என் வீட்டிற்கே
வந்தது!!!

வர்ண பகவானின்
வர்ண ஜாலமோ!!! 
என் ஆசையை
நிறைவேற்றினாரா!!!
என் அப்பாவை
காப்பாற்றினாரா!!!

அட கடவுளே!!!
மின் தடையுமா
என் கவிதை கிறுக்கலை
சோதிக்க வேண்டும்!!
மின்சாரம் இல்லாவிட்டால் என்ன?
மின்னல் ஒளி
போதுமே எனக்கு!!!

யார் அந்த ஓவியன்
வானத்தில் அழகாக
வண்ணம் தீட்டியிருக்கிறானே!!!
என் எண்ணங்களை 
கவிதையாய் தீட்ட
இவையாவும் போதுமே எனக்கு!!!