Wednesday 4 July 2012

மழை போதுமே

கவிதை என்ற 
ஓர் வார்த்தை 
மட்டுமே மனதில்...
அமர்ந்தேன் 
என் வீட்டு முற்றத்தில்
நேரங்கள் மட்டுமே 
நகர்ந்தது..
என் எழுதுகோல் 
சிலையானது...

சிலைகள் நகருமா?
என்று கேட்கிறீர்களா!!!
நகர்ந்ததே..
முதல் துளி 
வெள்ளை தாளில் பட்டதும்...
மைத்துளி அல்ல 
மழைத்துளி...

இடியின் முழக்கங்கள் 
எழுது எழுது என்று
அச்சுறுத்தினாலும்
மழையின் சாரல்
மனதை
மகிழ்வித்தது...

குற்றால அருவிக்கு 
கூட்டி செல்ல
என் அப்பாவை
இம்சித்த ஞாபகம்...
பயண அலுப்பே
இல்லாமல் 
அருவியே பயணம் செய்து
என் வீட்டிற்கே
வந்தது!!!

வர்ண பகவானின்
வர்ண ஜாலமோ!!! 
என் ஆசையை
நிறைவேற்றினாரா!!!
என் அப்பாவை
காப்பாற்றினாரா!!!

அட கடவுளே!!!
மின் தடையுமா
என் கவிதை கிறுக்கலை
சோதிக்க வேண்டும்!!
மின்சாரம் இல்லாவிட்டால் என்ன?
மின்னல் ஒளி
போதுமே எனக்கு!!!

யார் அந்த ஓவியன்
வானத்தில் அழகாக
வண்ணம் தீட்டியிருக்கிறானே!!!
என் எண்ணங்களை 
கவிதையாய் தீட்ட
இவையாவும் போதுமே எனக்கு!!!

No comments:

Post a Comment